இலங்கையில் ஜுலை, ஆகஸ்டில் நடக்கவிருந்த சில பரீட்சைகள் பிட்போடப்பட்டன!

பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல்!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆரம்பித்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை 2017(2020), அதிபர் சேவையின் இரண்டாம் தர அதிகாரிகளுக்கான தடைதாண்டல் பரீட்சை 2019 (2020) உள்ளிட்ட சில பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.