உலக சாதனை புரிந்த நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கை! இணையத்தில் வைரலாகும் நடனம்!

உலக சாதனை புரிந்த நடிகை!

நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையும் நடிகையுமான ஸ்ரீரம்யா தனது நடனத்திறமையின் மூலமாக உலக சாதனை புரிந்துள்ளார்.

சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா, அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரிதும் அவருக்கு வெற்றியளிக்கவில்லை.

சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அதன்பின்னர், வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகைகள் அட்ரஸ் தெரியாமல் போவதெல்லாம் வழக்கமாக நடப்பதுதான். சிலர் ரசிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருவார்கள். அந்த லிஸ்டில் ஸ்ரீதிவ்யா முதலிடம் பிடித்தவர் என்று தான் கூற வேண்டும்.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பின்னர், அவர் நடித்த காக்கிச்சட்டை, வெள்ளக்காரத்துரை, ஜீவா உள்ளிட்ட எந்த படமும் அவருக்கு புகழை ஏற்படுத்தவில்லை. ஸ்ரீ திவ்யாவின் தங்கையான ஸ்ரீ ரம்யாவும், ஒரு நடிகைதான் அவர் யமுனா என்ற தமிழ் படத்தில் நடித்து இருப்பார்.

அவரது ஒரு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆந்திர அரசு சிறந்த நடிகைக்கான நந்தி விருதை ரம்யாவுக்கு வழங்கி கௌரவித்தது. இந்தநிலையில், சமீபத்தில் அவர் தனது பயிற்சியாளர் உடன் கொசிம்பா நடனமாடியது இணையத்தில் வைரல் ஆனது.

இதற்கு காரணம் அவர் தனது பயிற்சியாளர்கள் மிக நெருக்கமாக நடனமாடி இருப்பார். இந்த நிலையில், தற்போது ஸ்ரீரம்யா மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் கலாச்சார நடனத்தை ஆடி உலக புகழ் பெற்றுள்ளார்.