கணவனின் பிறந்த நாள் மனைவியின் இறந்த நாளாகிய சோகம்! கொண்டாட்டத்தில் குடும்பத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சென்னை

சென்னை அண்ணா நகரில், என்.பிளாக் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (90) – மணிமேகலை(80) தம்பதிக்கு அனந்த பத்மநாபன் என்ற மகனும், சித்ரா, புவனேஸ்வரி என்ற மகள்களும் உள்ளனர்.

கடந்த 13 ம் தேதி பார்த்தசாரதிக்கு 90வது பிறந்த நாள் வந்துள்ளது. எனவே, அதனை சிறப்பாக கொண்டாட இவர்களின் மகன் மற்றும் மகள்கள் திட்டமிட்டனர். இந்த விழாவில், பேரன், பேத்தி என்று அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை அடுத்து பிறந்த நாள் விழா நடந்து முடிந்ததும், மணிமேகலை சமயல் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ந்த குடும்பத்தினர் மணிமேகலையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அப்போது மணிமேகலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.