வனிதா
கொரோனா பாதிப்பு குறித்த செய்திகளை விட தற்போது வனிதாவின் புதிய திருமணம் குறித்த செய்திகளே இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றது. அண்மையில் அவர் இயக்குனர் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார்,இதனை அடுத்து தமிழகத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வருகின்றது.
பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் அளித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் சில திரையுலக நட்சத்திரங்களும் இந்த திருமணத்தை கண்டித்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக சூரியா தேவி என்ற பெண் நடிகை வனிதாவை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.இதனை அடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதாவும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில், எலிசபெத் மற்றும் சூரிய தேவி இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்போது அந்த வீடியோ தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. வனிதாவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணி உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.
இந்த நிலையில், நடிகை வனிதா தன்னை பற்றி சூர்யா தேவி அவதூறு பரப்புவதாக வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே, சூர்யாதேவி தெலுங்கானா கவர்னர் தமிழிசை குறித்து அவதூறு பேசியதால் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.