கொழும்பில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பொலிஸ் அதிகாரி!

ஹோமாகம – நுகேகொட பொலிஸ் பிரிவில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுள் ஒன்பது பொலிஸ் அதிகாரிகளும், நான்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களுள் 13 பொலிஸாரும் ஐந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் அத்திட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

சார்ஜண்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து பொலிஸார் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.