லொஸ்லியாவின் புதிய போட்டோ ஷூட்..சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

வைரலாகி வரும் லொஸ்லியாவின் புகைப்படங்கள்!

தினமும் புதிய புதிய போட்டோ ஷூட் சேய்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருகின்றார் லொஸ்லியா.

அண்மையில் விஜய் TV பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்களாக போட்டி மிகவும் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக சென்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து போட்டி நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுநாளே இவருக்கென ஏராளமான ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்து கொள்ளவில்லை.

தமிழ் சினிமாவில் லொஸ்லியாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது லொஸ்லியா படவாய்ப்புக்காக புதிய போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இதனை அடுத்து தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டாகாசமான புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.