ஜூலை 18,2020
இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 26ம் தேதி, 18.7.2020 சனிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி நள்ளிரவு 12:29 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 9:40 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. சூலம் : கிழக்கு
* பரிகாரம் : தயிர் * சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை * பொது : மகா பிரதோஷம்
மேஷம்: ரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. கலைஞர்களுக்கு மனதில் வீண் பயங்கள் தோன்றும். நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.
ரிஷபம்: பெற்றோரின் நீண்ட நாளைய கனவுகளை நனவாக்குவீர்கள். உறவினர்கள் வீட்டு விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள். கலைத் துறையினரின் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
மிதுனம் : பல காலமாக இருந்து வந்த துன்பங்களிலிருந்து மீளுவீர்கள். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினருடன் பழைய நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
கடகம்: குடும்பத்தின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்வீர்கள். பெண்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர் வகையில் சிறிய அளவில் மனகசப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம் : தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமையைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசினால் லாபத்தை அதிகப்படுத்தலாம்.
கன்னி: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. அலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
துலாம்: வேலையில் கவனமாக இருந்து மேலதிகாரியிடம் பாராட்டுப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள புதிய வாய்ப்புகள் உருவாகும். பெண்கள் மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்: கலைஞர்களுக்கு மனகஷ்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்படும். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு. சுபநிகழ்ச்சிகள் தள்ளிப்போனாலும் நல்லபடியாக நடக்கும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
தனுசு: சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டு பின் சரியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
மகரம்: கடினமான பணிகளை எளிதாக முடித்து மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பெண்களுக்கு உழைப்பின் காரணமாக நல்ல பலன் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
கும்பம்: குடும்பத்தில் பிரச்னைகள் மறைந்து அமைதி நிலவும். அலுவலகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். வியாபாரத்தில் புதிய முயற்சியின் காரணமாக லாபம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்.
மீனம்: குடும்ப நிதிநிலை பெரிதாக ஏதும் பாதிக்க வாய்ப்பில்லை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நெருங்கிய நண்பர்களால் மனக்கஷ்டம் உண்டாகலாம். அலுவலக விஷயங்களில் நிம்மதி கிடைக்கும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.