ஜூலை 19,2020
இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 4ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி, 19.7.2020 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி நள்ளிரவு 12:17 வரை, அதன்பின் அமாவாசை திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 10:15 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. சூலம் : மேற்கு
* பரிகாரம் : வெல்லம் * சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம் * பொது: மாத சிவராத்திரி
மேஷம்: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் பணவரவு எதிர்பார்த்தபடி அதிகரிக்கும். உடன் பிறந்தோருக்கு, சுப நிகழ்ச்சி முடிவாகும். நண்பர்களிடம் கடந்தகால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை.
ரிஷபம்: உத்தியோகஸ்தர்களுக்கு புதிதாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பெண்களின் சாதனைக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்திலிருந்த தேக்க நிலை மாறும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
மிதுனம் : மனதில் நினைப்பதை வெளிப்படையாக மற்றவர்களிடம் கூறுவீர்கள். அயராத உழைப்பு உங்களுக்கு மேன்மையை கொடுக்கும். நண்பர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.
கடகம்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். சொத்து வாங்கும் போது கவனத்துடன் ஆராய்ந்து வாங்குங்கள். சுபச்செலவுகள் உண்டு. தொழிலில் முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.
சிம்மம் : திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். வெளிநாட்டு உத்யோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குடும்ப விவகாரங்களில் நல்ல மாற்றம் உண்டாகும். வாழ்வில் முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி : செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கியமானவர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கலைஞர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.
துலாம் : கடந்த நாட்களில் இருந்த சோகம் தீரும். அலுவலகத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வரவு கணிசமாக இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் ஏற்பட்ட தொல்லை குறையும்.
விருச்சிகம் : எதிர்பார்த்த சில நன்மைகள் தள்ளிப் போவதால் குழப்பம் ஏற்படும். அலுவலகத்தில் எந்த வம்பிலும் சிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.
தனுசு : வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பெண்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. வியாபாரத்தில் லாபம் ஈட்டப் போராடுவீர்கள். அலுவலக நண்பர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் கைகொடுப்பார்கள்.
மகரம்: உழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரபலத் துறைகளில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்: நிலுவைப் பணிகளை முடிப்பதற்கு மேலதிகாரி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். வியாபாரத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டு லாபத்தை பெருக்குவீர்கள். முன்கோபம் குறைந்து கலகலப்பாக இருப்பீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் நல்லபடியாக முடியும்.
மீனம்: பெண்களின் உடல் நிலை சீராகும். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். அலுவலக நண்பரிடம் இருந்து பணியில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனசாட்சிபடி செயல்பட்டு பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்வீர்கள்.