இலங்கை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

க.பொத. உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை தொடர்பிலும் கல்வி அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.

புலமைப்பரிசில் பரீசை ஒக்டோபர் 11ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள நிலையில் மறுநாள் 12ஆம் திகதி திங்கட் கிழமை உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் மீண்டும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றும் உயர் தரப் பரீட்சைகள் நிறைவு பெற்றதும் நவம்பர் 16ஆம் திகதி திங்கட் கிழமை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.