கொரோனாவிடம் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி? இலங்கையர்களுக்கு ஆயுர்வேத சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை!

கொரோனாவிடம் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி..?

கொரோனாவிடம் இருந்து தப்புவது தொடர்பில் ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் பொது மக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸிற்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில் பயன்படுத்திய உள்ளூர் மருந்துகளுக்கு திரும்புமாறு ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் இலங்கை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சட்டத்திட்டங்களுக்கு மதிப்பளித்தும் அதோடு உள்ளூர் மருந்துகளுக்கு திரும்புமாறு ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஞ்சி, கொத்தமல்லி உட்பட உள்ளூர் ஆயுர்வேத பொருட்களை, வீடுகளில் பயன்படுத்துவன் மூலம் கொரோனா தொற்றிடம் இருந்து தப்பிவிடலாம் என ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பீ.ஹேவாகமகே குறிப்பிட்டுள்ளார்.