இளைஞர் ஒருவர் எல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து பலி!
வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த ச நபர் ஒருவர் தனது காதலியுடன் செல்பி எடுக்க முயன்ற போது தூவில எல நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து உயிரிழந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது காதலியுடன் பாறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அந்த நபர் கால் தவறி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்த மக்களால் அந்த நபர் மீட்கப்பட்டு, நெலுவ மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் வெள்ளவத்தை உள்ள நெல்சன் வீதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக காலியில் உள்ள கராபிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.