கொழும்பில் மேலதிக வகுப்புக்களில் கலந்து கொண்ட மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவனுக்கு கொரோனா!

இலங்கையில் வகுப்புக்களுக்கு சென்று வந்த மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியில் கஹதுடுவ பிரதேசத்தில் மேலதிக வகுப்பினை நடத்திய ஆசிரியர்கள் மற்றும் அதில் கலந்து கொண்ட 65 மாணவர்களுக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கஹதுடுவ பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவர் ஒருவர் மேலதிக வகுப்பிற்கு வருகைத்தந்ததாக தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்தே இந்த PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் ஹோமாகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி பழகியவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இவர்களுள் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.