சுகாதார பிரிவினரின் நடவடிக்கையால் இலங்கைக்கு வரப்போகும் பாரிய ஆபத்து!

சுகாதார பிரிவினரின் தொழிற்சங்க நடவடிக்கை

தற்போது நாடு முழுவதும் பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்கும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்தாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் டெங்கு நோய் பரிசோதனைக்காக வீடுகளுக்கு செல்லும் நடவடிக்கை, நுளம்பு பெருகும் இடத்தை நடத்தி செல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இதுவரையில் தடைப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை நீடித்தால் பாரிய சிக்கல் நிலைமை ஒன்று நாட்டில் ஏற்படும் என கூறப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் சந்தரப்பத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுவதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான அதிகாரங்களை வழங்குமாறு கோரி இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.