தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தாண்டியது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேலும் சென்னையில் கடந்த மாதம் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் தங்கம்விலை 38 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று சென்னையில், 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,785 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.38,280 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம்விலை சவரனுக்கு ரூ.544 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,019 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.40,152 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் இன்று வெள்ளி விலை, நேற்றைய விலையில் இருந்து ஒரு கிராமிற்கு 5 ரூபாய் 80 காசுகள் அதிகரித்து, ரூ.65.70 ஆகவும், 1 கிலோவிற்கு ரூ.65,700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களை பொறுத்த வரையில் கடுமையான அளவு உயர்ந்து இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்றைய நிலவரப்படி இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.