லிப்டில் மாட்டிக்கொண்ட தாய், மகள்!
தாய் மற்றும் மகள் வசித்து வந்த நான்கு மாடிகுடியிருப்பில் இருக்கும் லிப்டில், மாடிக்கு சென்ற நேரத்தில் திடீரென லிப்ட் பழுதாகியுள்ளதாகவும், இதனால் இருவரும் உள்ளேயே சிக்கியுள்ளனர் என்றும் சீன பத்திரிகைகள் செய்தியை வெளியிட்டுள்ளது.
82 வயதுடைய தாய் மற்றும் அவரது 64 வயது மகள் இந்த லிப்டில் மாட்டிக்கொண்டுள்ளனர். மேலும், இருவரும் பலவிதமாக உதவிக்கு அழைத்தும் ஏதும் பலனளிக்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து இவர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒருவருக்கொருவர் சிறுநீரை குடித்து உயிர்பிழைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சுமார் 96 மணிநேரத்திற்கு பின்னர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு, அங்குள்ள ஜியான் நகரில் அமைந்துள்ள கயாசின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்புகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.