இலங்கையில் உள்ள அபூர்வமான வெள்ளை மறை மான்!வெளியாகி வரும் புகைப்படம்!!

அபூர்வமான வெள்ளை மறை மான்!

இலங்கையில் மத்திய மலையகத்தின் தும்பர பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அபூர்வ இனமான வெள்ளை மறை மான் ஒன்று சுற்றாடல் ஆர்வலரான கே.பி.லசி சுரங்க என்பவரின் கண்ணில் தென்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் பிட்டவலதென்ன என்ற காட்டுப் பகுதியில் வெள்ளை மறை மான் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

எனினும் தற்போது நாட்டில் அவதானிக்கப்பட்டுள்ள மறை மான் மலையகத்தின் வேறு ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தும்பர வனப்பகுதியில் சுற்றாட தொடர்பிலான ஆர்வாலர் ஒருவர் ஆராச்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில் இந்த வெள்ளை மறை மானை கண்டதாகவும், அதனை புகைப்படம் எடுத்துள்ளதுடன் அது குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.