இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்!

சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளி வழங்கும் திட்டம்!

நாட்டில் சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடை முறையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத் தகவலை போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் வாகன மற்றும் வீதி விபத்துக்களின் போது சாரதிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுவது தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்த விதிமுறையுடன் சாரதி அனுமதி பத்திரத்திற்கு புள்ளிகள் வழங்கும் திட்டத்தையும் நடமுறைப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும்.

சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்ற போதிலும் புள்ளிகள் குறைக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.