கட்டுநாயக்கா விமான நிலையம் வரும் பயணிகளுக்காக பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம்!

பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்!

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய உலகின் அதிக செயற்றிறன் வாய்ந்த விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் வாய்ந்த உபகரணத் தொகுதியொன்றை கட்டுநாயக்க விமான நிலையத்திற்காக கொள்வனவு செய்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த உபகரணங்களின் பெறுமதி ஆறு கோடிரூபாவாகும். இவற்றில் எக்ஸ் கதிர் இயந்திரங்கள், வெப்பநிலை உணர்திறன் கொண்ட பரிசோதனைக் கருவிகள் போன்றவையும் அடங்கும்.

இதன்மூலம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பொதிகளை இலகுவாக பரிசோதிக்க முடியும். நவீன தொழில்நுட்ப வசதி உட்புகுத்தப்பட்டிருப்பதால் பொதிகளைப் பரிசோதிப்பதற்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரத்தின் அளவு குறைவடையும்.

இதுவரை காலமும் விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை சோதனை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுவந்த கருவி சுமார் 19 வருடகாலங்கள் பழமையைானவை என்பது குறிப்பிடத்தக்கது.