காவல் நிலையத்தில் வைத்து வனிதா செய்த காரியத்தை மீடியாவில் புட்டு புட்டு வைத்த கைதான பெண்!

நடிகை வனிதா..

நடிகை வனிதாவின் திருமணம் அண்மையில் பலராலும் பேசப்பட்டு வந்தது.இந்த நிலையில் வனிதாவின் திருமண விவகாரம் தொடர்பாக, மிகவும் மோசமாக பேசிய சூர்யா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால், அவரின் முதல் மனைவியை ஏமாற்றி இப்படி ஏன் திருமணம் செய்ய வேண்டும்? நீயெல்லாம் ஒரு பெண்ணா? என்று வனிதாவை, சூர்யா தேவி என்பவர் தன்னுடைய யூ டியூப் சேனலில் மோசமாக திட்டினார்.

இதையடுத்து வனிதா சென்னை, வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அதில், நான் மேற்கண்ட முகவரியில் என் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் திரைப்பட நடிகை மற்றும் சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்திவருகிறேன். கடந்த 27.6.2020-ல் எங்கள் வீட்டில் எனக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் இருமணம் சேரும் விழா நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. எங்களுடைய நிகழ்வு அனைத்து சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதற்கிடையே எங்களுடைய இவ்விழாவை எதிர்ப்பு தெரிவித்து பீட்டர்பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவருக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் சூர்யாதேவி என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் யூடியூப் வாயிலாகவும் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளிலும் என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

என்னுடைய வீட்டுக்கு வெளியில் வந்து நின்று கொண்டிருப்பதாகவும், தனக்கு 5 நிமிடம் ஆகாது உன் வீட்டிற்குள் நுழைந்து உன்னை சாகடிப்பேன் என்றும் என்னைப் பற்றி பேசுவதற்காகவே ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி இருப்பதாகவும், அவருடைய வாழ்க்கை லட்சியமே என்னை அழிப்பதுதான் என்று பகிரங்கமாக அவதூறாகவும் ஆபாசமாகவும் என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். அவருடைய பேச்சு வ ன்முறையைத் தூண்டுவதுபோல் உள்ளது.

என் வீடு புகுந்து என்னைக் கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி, என் வீட்டு முன்பே ஒரு வீடியோவைப் பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.

எனது டியூப் சேனலை பெண்களும் குழந்தைகளும் பார்க்கிறார்கள். ஆனால், இவர்களின் ஆ பாச பதிவுகள் டிரெண்டிங் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஆ பாசம் வ ன்முறையும் பரப்புகிறது.

ஆகவே, என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் தூண்டிவிடும் வகையில் பேசி வரும் சூர்யா தேவி மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின் பொலிசார் சூர்யா தேவியின் வீட்டிற்கு சென்று விசாரணைக்காக வரும் படி அழைத்துள்ளனர். அதன் பின் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதன் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜாமீன் வாங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சூர்யா தேவி, தன்னை காவல்நிலையத்தில் இருந்த போது, வனிதா காலில் கிடந்த செருப்பால் அடிக்க வந்ததாகவும், பொலிசார் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

எனக்கே இப்படி ஒரு நிலை என்கிற போது, நிச்சயமாக பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு வாய்ப்பே இல்லை என்று பேசியுள்ளார்.