இன்றைய ராசிபலன்: 24.07.2020: ஆடி மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜூலை 24,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 9ம் தேதி, துல்ஹஜ் 2ம் தேதி, 24.7.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி மாலை 4:57 வரை, அதன்பின் பஞ்சமி திதி, பூரம் நட்சத்திரம் மாலை 6:48 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம் * சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம் * பொது : ஆடிப்பூரம், நாகசதுர்த்தி.

மேஷம்: கணவன், மனைவி இடையே ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: கலைஞர்களுக்கு சிறிய சாதனை காரணமாக தன்னம்பிக்கை கூடும். வியாபாரத்தில் எதிர்பார்தத நல்ல மாற்றத்தை காண்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

மிதுனம் : வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் நன்றியுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தினரிடையே இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிப்பதால் நிலுவைக் கடன்களை அடைப்பீர்கள்.

கடகம்: சிலரிடம் இருந்து வராது என நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வர். கலைத் துறையினருக்கு எதிர்பாராத விருதுகள் கிடைக்கும். எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை யோசித்துப் பேசுங்கள்.

சிம்மம் : மதிப்பு வாய்ந்த பெரியோர்களைச் சந்திப்பீர்கள். சமீபத்தில் இருந்த வீண் அலைச்சல் தீரும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுங்கள். பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மன அமைதியை பெறலாம். அலுவலகத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

கன்னி: பெரியோரின் ஆசியை பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். அலுவலகத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரிகளுக்கு பொறுமை தேவை.

துலாம் : வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். பெண்களின் அருமை வெளிப்படுவதால் பாராட்டுக் கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகமாவதால் திறமை கூடும்.

விருச்சிகம்: வியாபாரிகளுக்கு ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு பிடித்தமான செயல்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் சம்பள பாக்கியால் மனஅழுத்தத்துடன் காணப்படுவர். மகளுக்கு எதிர்பார்த்த வரன் அமைவதால் மகிழ்ச்சி கூடும்.

தனுசு: தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசினால் கூடுதல் லாபத்தை பெறலாம். உத்தியோகத்தில் மறைமுகத் தொந்தரவுகள் வந்து நீங்கும். பெண்களுக்கு சகிப்பு தன்மை அவசியம் தேவை.

மகரம்: அலுவலகத்தில் சகஊழியர்களால் பிரச்னை ஏற்படலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் சிறிய அளவில் தாமதம் ஏற்படக்கூடும். உறவினர்கள் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகளை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார். சுபச் செலவுகள் கூடும்.

கும்பம்: சிறிய அளவில் மனக்கலக்கம் உண்டாகலாம். அலுவலகத்தில் திறமையாக செயல்பட்டாலும் சிலரின் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள். எதிர்பாலினத்துடன் அதிக நெருக்கம் வேண்டாம். பெண்கள் சொந்த விஷயங்களை அக்கம் பக்கத்தினரிடம் பகிர வேண்டாம்.

மீனம்: உங்களுக்கு பிரச்னை தந்தவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு நல்ல படியாக இருக்கும். எதிர்பாலினத்தவரின் நட்பால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு செயலாற்றுவீர்கள்.