ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தாக மாறியுள்ள இலங்கை! மீண்டும் விதிக்கப்பட்ட தடை!!

ஐரோப்பிய நாடுகளுள் நுழைய இலங்கைக்கு மீண்டும் தடை!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கையர்கள் நுழைவதற்கு மீண்டும் இரண்டாவது முறையாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய கூடிய நாடுகளின் பட்டியல் ஒன்று இரண்டாவது முறையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அந்த நாடுகளின் பட்டியலில் இம்முறையும் இலங்கை இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 30ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட முதலாவது பட்டியலிலும் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.