காரின் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி..நொடிப்பொழுதில் அரங்கேறிய கோர சம்பவம்!!

வேலூரில் அரங்கேறிய சோகம்!

வேலூர் பகுதியில் வீதியில் நிறுத்தி வைத்திருந்த காரை எதிர் பாராமல் பின்னால் இயக்குகையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி பரிதாபமாக பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருக்கின்ற காகிதபட்டரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா.செந்தில்குமார் தனியார் விடுதியில் பணியாற்றி வருகிறார். கவிதா தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் இளைய மகள் சாரா, நேற்று மாலை நேரத்தில் சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஈசாக் என்பவர் தெருவில் நிறுத்தி வைத்திருந்த காரை பின்னால் இயக்கவே, காருக்கு பின்புறம் சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதில் கார் எதிர்பாராத விதமாக சிறுமி சாராவின் மீது கார் மோதி உள்ளது. மேலும், மற்றொரு குழந்தையின் மீதும் மோதியுள்ளது.

இதனையடுத்து இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அங்குள்ள சி.எம்.சி மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்துள்ளனர்.

இதனை அடுத்து 4 வயதுடைய குழந்தை சாரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றொரு குழந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.