நடிகை வனிதா வீட்டில் நள்ளிரவில் நடந்த கொண்டாட்டம்..!வெளியான புகைப்படம்!!

நடிகை வனிதா

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையினை ஒருபுறம் கிளப்பிக்கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் வீட்டில் கொண்டாட்டம் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

தற்போது வனிதாவின் திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரபலங்கள் உட்பட அனைவரையும் தனது பாணியில் வறுத்தெடுத்தும் வருகின்றார்.

இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் கடுப்பேற்றி வருகின்றார். ஆம் நள்ளிரவில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும் வனிதா வெளியிட்டுள்ள கொண்டாட்ட புகைப்படத்தினை பார்வையிட்ட ரசிகர்கள் பீட்டர் பாலுக்கா பிறந்தநாள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.