இன்றைய ராசிபலன்: 25.07.2020: ஆடி மாதம் 10ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜூலை 25,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 10ம் தேதி, துல்ஹஜ் 3ம் தேதி, 25.7.2020 சனிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி பகல் 2:40 வரை, அதன்பின் சஷ்டி திதி, உத்திரம் நட்சத்திரம் மாலை 5:18 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர் * சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி * பொது : கருட பஞ்சமி, கரிநாள்.

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். கணவன், மனைவி இடையே சின்ன சின்ன கருத்து வேறுபடுகள் வந்து நீங்கும். வியாபாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தோரின் மூலம் தேவையான உதவி கிடைக்கும்.

ரிஷபம்: நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களின் மூலம் வீண்செலவுகள் ஏற்படலாம். தாயாரின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். அலுவலகத்தில் அதிகக் கவனம் தேவை.

மிதுனம் : பணப் புழக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். நண்பர்கள் உங்களின் ஆலோசனைபடி செயல்படுவார்கள். பூர்வ சொத்து சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் உள்ள நீண்ட நாளைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.

கடகம்: தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். அலுவலகப் பணிகளை உற்சாக மனதுடன் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு உறவினர் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். கலைஞர்களின் திறமை பளிச்சிடும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.

சிம்மம் : பொதுநலப் பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். பேச்சில் கவனம் தேவை. கணவன், மனைவி இடையே சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் அது உடடினாயாக தீர்ந்துவிடும். தொழில் வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள புதிய வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி: வருமானத்தை உயர்த்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களின் மூலம் நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

துலாம்: தந்தையின் உடல்நலம் மேம்படும். பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். நிலுவைப் பணிகளை முடிப்பதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரிகளுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிகம்: பெண்கள் சோம்பலைத் தவிர்த்து துணிவுடன் செயல்படுவர். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வகையில் நல்ல செய்தி கிடைக்கும். மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிப்பதால் சேமிப்பு உயரும்.

தனுசு: சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். திடீர் பணவரவால் கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். வியாபாரத்தில் உள்ள பிரச்னைகள் தீரும். நண்பர்கள் தங்களின் குடும்ப விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். பேச்சில் கவனம் தேவை.

மகரம்: மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போனாலும் நல்லபடியாக முடியும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். நட்புக்கு மதிப்பளிப்பீர்கள்.

கும்பம்: சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சு வார்தைகளை இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் முக்கியப் பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

மீனம்: மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.