திருப்பதி சென்று வரும் வழியில் ஏற்பட்ட விபத்து..!
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்துர்கா கியாதிக்கேரா கிராமம் வழியாக சென்னை – மும்பை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது.
இந்த காரின் முன்புறம் லாரி சென்ற நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி நொறுங்கியதை அடுத்து, காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் அந்த காரில் பயணித்த பெண்கள் உட்பட 3 பேர் காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து படு காயமடைந்த மூவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுமதித்த நிலையில், சித்தூர்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்து சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது,குறித்த காரில் பயணம் செய்தவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயை சேர்ந்த சந்தோஷ் காய்க்வாட் (வயது 40), ஷாய் (வயது 18) என்பதும், காயமடைந்தவர்கள் ரேனுஸ்ரீ, திராட்சாயிணி மற்றும் கார் ஓட்டுநர் கைலாஷ் என்பதும், திருப்பதியில் வழிபாட்டினை முடித்துவிட்டு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியாகியமை தெரியவந்துள்ளது.