நடிகை வனிதா..
நடிகை வனிதாவின் திருமணத்தை தொடர்ந்து நாளுக்கு நாள் வனிதாவின் பஞ்சாயத்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஸ்ரீ ரெட்டிக்கு அடுத்தபடியாக நட்சத்திரங்களின் வாழ்க்கையில் புகுந்து அவர்களுடைய ரகசியங்களை அம்பலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வனிதாவின் பிரச்சனையில் தலையிடும் அனைத்து நடிகைகளையும் அவர் வெளுத்து வாங்கி வருகின்றார்.
சிறிதும் மரியாதை இல்லாமல் நேரடியாக பேட்டியிலேயே தகாத வார்த்தைகளை பேசி வருகின்றார். சமீபத்தில் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வனிதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோசமான வார்த்தைகளை கொண்டு இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டனர். அண்மையில் நடிகை வனிதா தஞ்சாவூர் சென்று பாருங்கள்.
அங்கு இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருப்பார்கள் என்ற விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ” தஞ்சாவூர் எனது பூர்வீகம், அதன் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்..
நான் எனது குடும்பத்தினர் அனைவரையும் புண்படுத்த நான் எதுவும் பேசவில்லை.. நான் மிகவும் பெருமையுடன் பேசினேன், ஆண்கள் தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்வதில் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு உண்மையாக இருப்பார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.