முல்லைத்தீவு நிராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு!

நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு

நேற்றைய தினம் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி மடைப்பண்டங்கள் கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, பொங்கல் சடங்குகள் ஆரம்பமாகி பொங்கல் நிகழ்வுகள் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றன.

நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றினைக் கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த பொங்கல் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இதற்கமைய ஆலயத்திற்கு ந 50 பக்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டு பொங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.