தப்பிச்சென்ற கொரோனா நோயாளியின் பதில்!
நேற்றைய தினம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்று பரபரப்பை ஏற்படுத்திய கொரோனா நோயாளி 8 மணித்தியாலங்களின் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் தப்பிச் சென்றமைக்கான காரணம் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் வினவியுள்ளார்.
அதற்கு பதிலளித்தவர்,
“நான் யோசித்து யோசித்து மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன். அங்கு யாரும் இருக்கவில்லை. அப்போது தப்பி வந்து விட்டேன்.
அதிகாலை 4.30 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி விட்டேன். 9 மணியளவில் புறக்கோட்டைக்கு வந்து விட்டேன்.
IDH இல் இருந்து வெல்லம்பிட்டிய ஊடாக புறக்கோட்டைக்கு நடந்தே வந்தேன். எந்தவொரு கடைகளிலும் உணவு உட்கொள்ளவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.