ஜூலை 26,2020
இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 11ம் தேதி, துல்ஹஜ் 4ம் தேதி, 26.7.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி பகல் 12:15 வரை, அதன்பின் சப்தமி திதி, அஸ்தம் நட்சத்திரம் பகல் 3:41 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. சூலம் : மேற்கு
* பரிகாரம் : வெல்லம் * சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி * பொது : சஷ்டி விரதம், வாஸ்து காலை 7:44 – 8:20 மணி
மேஷம்: வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். தந்தையின் ஆலோசனைபடி செயல்பட்டு பிரச்னையிலிருந்து மீளுவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்: சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் ஏற்படும். பயணத்தின்போது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும்.
மிதுனம் : எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மேலதிகாரி உங்களின் சூழ்நிலையை புரிந்து கொள்வார். உறவினர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
கடகம்: கணவரின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நிலுவைக் கடன் வசூலாவதால் புதிய முதலீடுகளை செய்வீர்கள். நண்பரின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சிம்மம் : பெண்கள் விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவர். கலைத்துறையினர் எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. திட்டமிட்ட செயல்கள் தள்ளிப் போகலாம். அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். வியாபாரிகள் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
கன்னி: எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள். சகோதர, சகோதரிகளுக்கு அரசாங்க வகையில் நன்மை ஏற்படும்.
துலாம்: தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு நீங்கும். கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் புதிய வாய்ப்புகளைப் பயன்டுத்தி பதவி உயர்வு பெறுவர். உடன்பிறந்தவர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும்.
விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். பெற்றோர் தரும் ஆதரவினால் கடினமான செயல்களைகூட எளிதாக செய்து முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
தனுசு: வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் உருவாகும். நண்பர்களின் சூழ்நிலையை உணர்ந்து உதவுவீர்கள். உங்களின் வளர்ச்சிக்கு காரணமான சிலரைச் சந்திப்பீர்கள்.
மகரம்: கடினமான உழைப்பினால் வெற்றி பெறுவீா்கள். செலவுக்கேற்ற வரவு இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீா்கள். குழந்தைகளால் பெருமை உண்டாகும். சகஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து சென்றால் அவர்களுடைய உதவி கிடைக்கும்.
கும்பம்: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. சகஊழியர்களுடைய குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
மீனம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்திருந்த செயல்கள்கூட இழுபறியில் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எதையும் இப்போதைக்கு எடுக்க வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.