“எனக்கு கொரோனாவா..?”ஆவேசத்துடன் வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி!

சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ!

வனிதா விவாகரத்து வாங்காமல் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் சூர்யா தேவி எலிசபெத்திற்கு ஆதரவாக வனிதாவை மோசமாக திட்டி பல காணொளிகளை யூட்யூபில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் வனிதா சூர்யாதேவியின் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை என்று அழைத்துச்சென்று காவலில் வைத்துவிட்டு ஜாமீனில் அனுப்பியுள்ளனர்.

தற்போது சூர்யா தேவிக்கு கொரோனா என்று வனிதா வெளியிட்ட ட்விட் தீயாய் பரவியது. அதுமட்டுமின்றி பல மீடியாக்களும் சூர்யா தேவிக்கு கொரோனா என்றும், அவர் தலைமறைவாக இருக்கின்றார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா தேவி “எனக்கு கொரோனாவா?” என்று ஆவேசத்துடன் கேள்வி கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.