“என்னால் அவர்களுக்கு உணவு கிடைக்கட்டும்” நடிகை வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள புதிய பதிவு..

வைரலாகும் வனிதாவின் டுவிட்டர் பதிவு!

அண்மையில் நடிகை வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள புதிய பதிவு வைரலாகி வருகின்றது.

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் அவரை வனிதா மணந்தது தவறு என்றும் நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்தனர்.

இது தொடர்பாக வனிதாவுக்கும், அவர்களுக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் டுவிட்டரில் இருந்து விலகிய வனிதா மீண்டும் டுவிட்டரில் வந்து அதிரடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இதனிடையில் சமீபத்தில் வனிதாவிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணா விடயத்தில் லட்சுமியை பாராட்டினால் நமக்கு பாராட்டு வரும், இது யூடியூப் சேனல் நடத்திபவர்களுக்கு பலன் தரும், இது தான் லட்சுமி செய்யும் சமூக சேவையா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வனிதா, நிஜ உலகில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது.

அவர்கள் எல்லோரையும் காரி துப்புகிறார்கள், இந்த மோசமான காலங்களில் என்னால் அவர்களுக்கு உணவு கிடைக்கட்டும், இதுவும் கடந்து போகட்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.