தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி குரங்கு…தாய்ப்பாசத்தின் உச்சத்தை காட்டும் வைரல் வீடியோ!!

தொட்டிக்குள் சிக்கிய குரங்கை, மற்றொரு குரங்கு மீட்கும் காட்சி!

தண்ணீர் தேங்கிய குப்பை தொட்டி ஒன்றுக்குள் தவறி விழுந்த குட்டி குரங்கை, மற்றொரு குரங்கு போராடி மீட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது.

தண்ணீர் தேங்கிய குப்பை தொட்டியில் மேல் நின்று விளையாடிய குரங்கு குட்டி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த தொட்டிக்குள் விழுந்தது. இதனையடுத்து தொட்டிக்குள் கரண்டை கால் அளவே நீர் இருந்ததால், அப்படியே குரங்கு குட்டி நின்று கொண்டது.

பின்னர், தொட்டிக்குள் கிடந்த பற்பசை பாக்கெட்டை வாயில் வைத்து கடித்துக் கொண்டு விளையாடி இருந்த நிலையில், குழந்தையை மீட்க தாய்ப்பாசத்துடன் வேகமாகவும், பதைபதைப்புடன் செயல்பட்டு குரங்கின் தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தியது.

முதலில் தலைகீழாக தொட்டிக்குள் கையை விட்டு பார்த்த குரங்கு, எந்த விதமான முயற்சியும் பலனளிக்காத நிலையில், எப்படியாவது குரங்கை மீட்டுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், அந்த குரங்கு இறுதி போராட்டத்தில் மீட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடியோவை காண இங்கு அழுத்தவும்..