நாட்டிற்கு திரும்பவுள்ள இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி!

இராணுவ தளபதி சவேந்திர சில்வா வெளியிட்ட தகவல்!

தற்பபோது கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள், மீண்டும் அடுத்த வாரம் முதல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இத்தகவலை கடுவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு பேசிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 14ம் திகதியிலிருந்து வெளிநாட்டில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.