இலங்கையில் மீண்டும் ஆ பத்து… தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எ ச்சரிக்கை!!

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்ட தகவல்!

நாட்டில் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இன்னமும் கொரோனா வைரஸ் பரவல் ஆ பத்து நீங்கவில்லை என பொது மக்களுக்கு எ ச்சரிக்கை வி டுக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என சங்கத்தின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எ ச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக பொது மக்களிடம் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் கட்டுப்படுத்திய நிலைமை ஒன்று இலங்கையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.