மா ணவர்களை ஈ டுபடுத்தி ஆ பா ச கா ணொளி எ டுத்த ஆ சிரியர்!
கொழும்பில் பாடசாலை மா ணவர்களை ப யன்படுத்தி ஆ பா ச கா ணொளி எ டுத்தத்ததாக கு ற்றம் சு மத்தப்பட்ட ஆ சிரியர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மேலதிக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியருக்கு எதிராக மாணவர்களின் வீடியோக்களை ஆதாரமாக பெற்றுக் கொள்வதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
குறித்த 54 வயதுடைய ஆசிரியர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மேலதிக வகுப்புக்களை நடத்துபவராவார் . இந்த நபருக்கு சொந்தமான Pen driver காணாமல் போனதை அடுத்து அதில் இருந்த வீடியோக்கள் சில சமூக வலைத்தளம் ஊடாக வெளியாக ஆரம்பித்துள்ளது.
அந்த வீடியோவில் பா டசாலை மா ணவர்களின் ஆ பா ச கா ணொளிகள் கா ணப்பட்ட நி லையில், மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உடன் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபரை கைது செய்துள்ளார்.
சந்தேக நபர் பன்னிப்பிட்டிய பிரதேச வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்பிப்பதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபரின் வீட்டில் இருந்து பல மா ணவர்களின் ஆ டைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியில் மாணவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட பல வீடியோக்களும் கண்டுபிடிக்ப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அவரால் எடுக்கப்பட்ட 137 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் இடங்களுக்கு சென்று மாணவர்களின் புகைப்படம் மற்றும் காணொளிகளை ட்ரோன் கமரா பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.