நடிகர் பொன்னம்பலத்திற்கு சிகிச்சைக்காக ரசிகர்கள் கொடுத்த பணம்…நெகிழ்ச்சியுடன் கூறிய தகவல்!

நடிகர் பொன்னம்பலம்

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகரான பொன்னம்பலம் தனக்கு ரசிகர்கள் நூறு, ஐம்பது என ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்பியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த பிரபல திரைப்பட நடிகர் பொன்னம்பலம், மூ ச்சுத்தி ணறல் ஏற்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருடைய சிகிச்சைக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உதவினர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் பலரும் தங்களால் இயன்ற பணத்தை அவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம், இந்த இக்கட்டான சூழலில், ஸ்டண்ட் யூனியன் தன்னைக் கைவிட்டு விட்டதாகவும் ரசிகர்களும் சக கலைஞர்களும் தான் உதவி செய்துள்ளனர் என்றும் உருக்கமுடன் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தற்போது நிலவும் இந்த கொரோனா பிரச்சனை காரணமாக என்னால் ஒரு மருத்துவமனையில் உடனடியாக போக முடியவில்லை.

மாத்திரை மருந்து கடையில் கேட்டால் கூட அது சரியாக கிடைப்பதில்லை, இதனால் சரியாக மாத்திரை சாப்பிட முடியாததாலும், மருத்துவமனைக்கு செல்லாத காரணத்தினாலும், ஒரு கட்டத்தில் மூ ச்சு வி டுவதில் எ னக்கு க டும் சி ரமம் ஏ ற்பட்டது.

அதன் பின், மருத்துவமனைக்குப் சென்றால் ஐசியு முழுவதும் கொரோனா நோயாளிகள் இருந்தாங்க. எனக்கு அட்மிஷன் கிடைக்கவே இல்லை.

ஒரு சில நாள் காத்திருந்து தான் எனக்கு அட்மிஷன் கிடைத்தது. கொரோனாவோன்னு டெஸ்ட் எடுத்து பார்த்தாங்க, அப்போ நெகட்டிவ்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருந்துது.

சி றுநீரகப் பி ரச்னைக்கு டி ரீட்மெண்ட் எ டுத்துகிட்டேன். கொரோனாவால யாருமே வ ந்து பா ர்க்கல. த ற்கொ லை எ ண்ணம் கூ ட ம னசுல ஓ டுச்சு. மோ சமான காலம் அது. இப்போ பரவால்ல; நடக்க ஆரம்பிச்சிட்டேன்.

இந்த இக்கட்டான கால கட்டத்துல என்னோட சண்டை கலைஞர்கள் யூனியன் எனக்கு எந்தவிதத்துலையும் உதவி செய்யவில்லை.

எனக்கு வரவேண்டிய ஐந்து லட்சம் ஓய்வூதியத் தொகை கூட இன்னும் கொடுக்கவில்லை. காரணம் கேட்டால், சந்தா கட்டல, உறுப்பினரே இல்லை என்று கதை விடுறாங்க.

34 வருடத்திற்கு முன்னாடியே 5000 ரூபாய் கட்டி ஸ்டண்ட் யூனியன்ல உறுப்பினரா சேர்ந்தேன். அப்போ அந்த காசுக்கு ஒரு நிலத்தை வாங்கிருந்தா இன்னைக்கு நானும் கோடீஸ்வரன். என் பிரச்னைய தீர்க்க கோர்ட் வரைக்கும் கூட போய் பார்த்துட்டேன். பலன் இல்லை.

இந்த இக்கட்டான சூழலில் எனக்கு உதவியது சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் தான் என்று கூறுவேன். அர்ஜூன், சரத்குமார், தனுஷ் எல்லாரும் எனக்கு உதவி செய்தார்கள்.

என்னோட ரசிகர்கள் என்னோட க ஷ்டத்தைத் தெரிஞ்சிகிட்டு 100, 50 என்று ஒரு லட்சத்திற்கும் மேல பேங்குல டெபாசிட் பன்னிருக்காங்க.

அவங்கதான் எனக்கும் தெய்வம். ஆனால் எனக்கு தேவையான அளவுக்கு சக நடிகர்கள் உதவி செய்துவிட்டதால், அந்த பணத்தை நான் அப்படியே ஸ்டண்ட் யூனியனோட அக்கவுண்டுக்கு போட்டுவிட்டேன்.

என்ன மாதிரி கஷ்டப்படற என் சக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அந்த பணம் உதவனும். என்னுடைய பணத்த யூனியன் ஏத்துக்கணும். அரசாங்கத்துக்கு நானு ஒரேயொரு கோரிக்கைதான் வைக்கறேன். கொரோனா பிரச்னையினால மத்த நோயாளிங்க ரொம்பவும் கஷ்டப்படுறாங்க. அவுங்களுக்கும் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.