நடிகை வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த பிரச்சினை அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அவருக்கு ஆதரவாக பலரும் களமிறங்கினர்.

இந்நிலையில் வனிதா தனது கணவர் பீட்டர் பாலுடன் பேட்டி ஒன்று கொடுத்துள்ள நிலையில் இதனை பல பிரபலங்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆனாலும் இதனையெல்லாம் போருட்டாக எடுத்துக்கொள்ளாமல் வனிதா தனது கணவருடன் புகைப்படம் எடுத்ததுடன், அடுத்தடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

ஆனால் இதனை அவதானித்த நெட்டிசன்கள் வனிதாவை மட்டுமின்றி அவரது மகளையும் வைச்சி செய்து வருகின்றனர். வனிதாவின் ஹெட்டர்ஸ் சிறு குழந்தை என்று கூட பார்க்காமல் ஜோவிகாவையும் முகம்சுழிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா மதுமிதாவிடம் நாள்தோறும் சண்டையிட்டு வந்ததாகவும், மதுமிதாவின் கையில் ரத்தம் வந்த பின்பு அவரை நக்கலாக பேசியதுடன், மிகவும் திமிராக கமெராவை பிக்பாஸிடம் பேசிய இவர் இன்று சைபர் புல்லிங் செய்வது தவறு என்று கூறியுள்ளது என்ன நியாயம் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே ஒருவருடன் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்றும் மதுமிதா தலைவராக இருந்த போது உள்ள சில போட்டியாளர்களை சேர்த்துக்கொண்டு ஸ்ரைக் செய்தது எல்லாம் வெளியில் காட்டப்படவில்லை என்று கஸ்தூரி பல உண்மைகளை உடைத்துள்ளார்.

மேலும் வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர், மக்கள் நீதி மய்யத்திற்கு வேண்டியவர் என்றும் இதனாலே வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் நல்லவராகவே காட்டப்பட்டார் என்றும் பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.