வியட்நாம்

வியட்நாம் நாட்டில் உள்ள குவாங் பிங்க் மாகாணத்தில் இருக்கும் டாங் ஹூ பள்ளியில், கடந்த 1990 ஆம் வருடத்தில் பயின்ற ஒரே வகுப்பை சேர்ந்த நண்பர்கள் அனைவரும், தங்களது பள்ளியில் சந்தித்து 30 ஆவது வருடவிழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து வெவ்வேறு இடத்தில் பணியாற்றி வந்த அனைவரும் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்து, சுற்றுலா செல்ல முடிவு செய்து, அனைவரும் அங்குள்ள குவாங் மாகாணத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இவர்கள் பயணித்தை பேருந்து அங்குள்ள அல்ஷெட் சாலையில் உள்ள மலைப்பகுதியில் செல்கையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கு பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணம் செய்த 13 பேர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும், பலர் காயமடைந்து உயிருக்கு போராடித்துடித்த நிலையில், இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ததொடங்கினர். கடந்த 30 வருடத்திற்கு முன்னதாக பள்ளியில் பயின்ற நண்பர்கள் மீண்டும் சந்தித்து, விபத்தில் 13 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
