5 ரூபாய்காக 12 மணி நேரமாக உ யிருக்கு போ ராடியவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கொ டூரம்…ப ரிதாபமாக ப றிபோன உ யிர்..!!

இந்தியா..

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருக்கின்ற குணா மாவட்டத்தின் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் டேக்காட்.

இவர் நீண்ட நாட்களாக காச நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்று உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள குணாப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சுனிலை, அவரது மனைவி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், சுனிலை மருத்துவமனையில் அனுமதி செய்ய ரூ.5 செலுத்தி அனுமதி சீட்டு வாங்க வேண்டும் என்று கூறிய நிலையில், கணவனின் உடல்நிலையை எண்ணி கையில் பணம் கூட எடுக்காமல் வந்துள்ளார். மேலும், வீட்டில் இருந்து உறவினர்களை வரச்சொல்லி பணம் தருவதாகவும், இப்போது எனது கணவரை காப்பாற்றுமாறும் மிகவும் கெஞ்சி கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் சுனிலை அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், கிட்டத்தட்ட 12 மணிநேரம் அவசர ஊர்தியிலேயே காத்திருந்து வியாழக்கிழமை அன்று ப ரிதாபமாக உ யிரிழந்து ள்ளார்.

இந்த விடயம் குறித்து தகவல் வெளியாகி, பெ ரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.