இன்றைய ராசிபலன்: 28.07.2020: ஆடி மாதம் 13ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜூலை 28,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 13ம் தேதி, துல்ஹஜ் 6ம் தேதி, 28.7.2020 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 7:22 வரை, அதன்பின் நவமி திதி நள்ளிரவு 3:41 வரை, அதன்பின் தசமி திதி, சுவாதி நட்சத்திரம் பகல் 12:28 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால் * சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி * பொது: கருட ஜெயந்தி

மேஷம்: பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். சிலரிடம் எதிர்பார்த்த உதவி நியாயமான காரணங்களால் உங்களுக்கு கிடைக்காமல் போகக்கூடும். கலைத்துறையினரின் புதிய முயற்சி வெற்றி அடைய தாமதம் ஆகலாம்.

ரிஷபம்: பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். வேலை தேடுவோருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாளாக தேடிய பொருள் கைக்கு கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் சில குறுக்கீடுகள் வரலாம்.

மிதுனம் : வெளிநாட்டிலிருந்து மனதிற்கு இதமான செய்திகள் வரும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபரைச் சந்திப்பீர்கள். நெருங்கிய நண்பர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கடகம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகள் கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிக்க தொடங்குவர். நீண்ட நாள் கனவு நிறைவேறுவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம் : கொடுத்த வேலையை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். தந்தை வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் புதிய அனுபவத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால் லாபம் அதிகரிக்கும்.

கன்னி: பூர்வ சொத்து சம்மந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களின் மூலம் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள்.

துலாம் : மேலதிகாரிகள் உங்களின் நீண்ட நாளைய வேண்டுகோளை ஏற்பார்கள். கலைஞர்கள் முயற்சியில் வெற்றி பெறுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள்.

விருச்சிகம் : விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். அலுவலக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கணிசமான லாபம் இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

தனுசு: வியாபாரத்தில் உங்களின் புதிய யுக்தி லாபத்தை பெருக்க உதவும். பெண்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைத் துறையினர் தடைகளை சமாளிப்பர். பணியாளர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவர். விரும்பிய விஷயங்கள் கைகூடும்.

மகரம்: உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள். எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம். உடன்பிறந்தவருக்கு வேலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம்: வியாபாரத்தில் உள்ள நிலுவைக் கடன்களை வசூல் செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் தள்ளிப்போனாலும் நல்லபடியாக முடியும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள்.

மீனம்: திட்டமிட்ட முயற்சிகள் வெற்றி பெற காலதாமதம் ஏற்படலாம். உறவினர்களுடன் சிறு சிறு உரசல்கள் வந்து நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு குறையும். நெருங்கிய நண்பரிடம் கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.