உயிரிழந்த ஓட்டுனரின் இறுதி ஊர்வலம்…பின்னர் வெளியான அ திர்ச்சி செய்தி!

தமிழகம்

தமிழகத்தில் உள்ள புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 19ம் தேதி, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து சிகிச்சை பலனின்றி கந்தசாமி திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கந்தசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பு இறந்தவரின் உறவினர்கள் அரசியல் பிரமுகர் ஒருவரின் உதவியுடன் உடலை பெற்றுக் கொண்டு கடந்த 2ம் தேதி அடக்கம் செய்துவிட்டனர்.

கந்தசாமியின் உடலுக்கு பலர் நேரில் சென்றுஅஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இறந்துபோன கந்தசாமி கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், கந்தசாமியின் குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கிராம மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.