“கொரோனாவால் என் வாழ்க்கையில் இரண்டு நல்ல விஷயம் நடந்துள்ளது”மகிழ்ச்சியின் உச்சத்தில் வனிதா!

நடிகை வனிதா..

கொரோனாவால் தன் வாழ்க்கையில் இரண்டு நல்ல விடயம் நடந்துள்ளதாக நடிகை வனிதா மகிழ்ச்சியுடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

சூர்யா தேவியை தாக்கிய கொரோனா வைரஸ் வனிதாவுக்கு சாதகமாக இருப்பது போன்று ஒருவர் மீம்ஸ் போட்டிருந்தார்.

அதை பார்த்த வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிரிக்கக் கூடாது தான் ஆனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் கொரோனா வைரஸ் என்னிடம் அன்பாக உள்ளது. என் சோல்மேட்டை கண்டுபிடிக்க உதவியது, என் சேனல் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தது.

அதனால் கொரோனாவுக்கும் என்னை பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் வனிதாவுக்கு கொரோனா பாதிப்பு என்று தகவல் வெளியானபோது அதை பார்த்த அவரின் ரசிகர்களோ, அக்காவுக்கு கொரோனாவா, அந்த கொரோனாவுக்கு எம்புட்டு தைரியம் என்று கூற அதை பார்த்து வனிதா சிரித்தார்.

தன்னை பற்றி ஜாலியாக போடப்படும் மீம்ஸுகளை வனிதா ட்விட்டரில் ரீட்வீட் செய்கிறார். அதே சமயம் மோசமாக விமர்சித்து வரும் மீம்ஸுகளை பார்த்து விளாசவும் செய்கிறார். அடுத்தவர்களை கிண்டல் செய்வது தவறு என்று வனிதா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பிறகு எலிசபெத் ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் முறைப்படி விவாகரத்து கிடைக்கும் என்று வனிதா தெரிவித்துள்ளார். ஹெலனுக்கு பீட்டர் பாலிடம் இருந்து விவாகரத்தும், பணமும் தான் தேவை என்று வனிதா கூறியுள்ளார்.