இன்றைய ராசிபலன்: 29.07.2020: ஆடி மாதம் 14ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜூலை 29,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 14ம் தேதி, துல்ஹஜ் 7ம் தேதி, 29.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, தசமி திதி நள்ளிரவு 3:01 வரை, அதன்பின் ஏகாதசி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 11:01 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால் * சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி * பொது : விஷ்ணு வழிபாடு.

மேஷம்: மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அலுவலகப் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்: எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகளை பெறுவீர்கள். பல நாள்களாக ஏங்கிய சில விஷயங்களைச் சுலபமாக அடைவீர்கள்.

மிதுனம் : நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. அலுவலக விஷயங்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்த தடை நீங்கும். செல்வம் சேரும்.

கடகம்: வியாபாரத்தில் வேலையாட்கள் சிறிது பிரச்னை கொடுக்க வாய்ப்புள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். மனைவி வழி உறவினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள்.

சிம்மம் : பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். கடின உழைப்பினால் வெற்றிகளை ஈட்டுவீா்கள். சிலருக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வருமானம் சீராக இருக்கும். உறவினா்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

கன்னி: அடுத்தவரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படுவீர்கள். உங்கள் உழைப்பால் மேலதிகாரிகளை ஆச்சரியப்படுத்துவீர்கள். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள புதிய வாய்ப்புகள் உருவாகும்.

துலாம்: எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பீா்கள். மேலதிகாரியின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவீா்கள். கலைத் துறையினரின் செயல்கள் மக்களை கவரும் விதத்தில் அமையும். வியாபாரிகளின் புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்: உறவினர்களை சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். அக்கம் பக்கத்தினரிடையே உங்களின் செல்வாக்கு கூடும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். பணியை சிறப்பாக செய்து முடித்தாலும் அதில் சிலர் குறை காண்பர்.

தனுசு: அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். பணவரவுக்கு குறைவு இருக்காது. பணியாளர்கள் எதையும் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்: திட்டமிட்ட வேலையில் பல குறுக்கீடுகள் வந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பீா்கள். வியாபாரத்தில் ஏற்படும் சிறு விரயங்களால் கவலை ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் மகனிடம் இருந்து நிம்மதி தரும் செய்திகளை கேட்பீர்கள்.

கும்பம் : ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்யோகத்தில் சிறப்பான நிலையை அடைவீா்கள். பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும். எதிர்பாலினத்தினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

மீனம்: மகளின் திருமணம் பற்றி கவலை கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பண வரவுகள் சற்றே குறைவாக இருக்கும். அலுவலகத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பெண்கள் ஆடை, ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி கொள்வர்.