கைக்குழந்தையுடன் காரில் வந்த குடும்பம்.. திடீரென ஏற்பட்ட கோர விபத்து..பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

சென்னை..

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் , அதிஷ்டவசமாக யாரும் கா யம் இ ன்றி உ யிர் த ப்பியுள்ளனர்.

மதுரை கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். திருச்சி பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. காயத்ரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து இவர்கள் சென்னையில் வசித்து வந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இ-பாஸ் பெற்று மதுரைக்கு வந்துள்ளனர். இதில் திருச்சி அருகே வந்த போது, காரில் இருந்த இ-பாஸ் பறந்துள்ளது.

இ-பாஷை பிடிக்கும் முயற்சியில் கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து காரில் சிக்கியிருந்த கணவன் – மனைவி மற்றும் குழந்தை அ லறித்து டித்துள்ளனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கண்ணாடிகள் கையை கிழித்த போதும், உள்ளே இருப்பவர்களை தொடர்ந்து மீட்கும் பொருட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் அங்குள்ளவர்கள் வாகனத்தில் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நல்ல வேலையாக சிறிய கா யத்துடன் அனைவரும் உ யிர் த ப்பியுள்ளனர்.