பிரபல இளம் நடிகை திடீர் மரணம்…ரசிகர்களை சோகத்தில் ஆழ்திய செய்தி!!

பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் மரணம்…

இன்டிபென்டன்ட் மியூசிக் ஒரிசாவில் பிரபலமான காலத்தில் பல்வேறு மியூசிக் வீடியோக்களில் நடித்து மிகவும் பிரபலமானார் தீபா. அதன் பிறகு ஒடியா தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் தோன்றி நடித்துள்ளார்.

35 வயதுடைய தீபாவிற்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தொடர்ந்து தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் புவனேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தி ஒடியா சினிமா துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.