ஆண்குழந்தை இல்லாததால் மனைவியை விரட்டிவிட்டு; கணவன் எடுத்த விபரீத முடிவு.!

இந்தியா..

தற்போது பல குடும்பங்களில் கஷ்ரப்பட்டு வளர்த்த பெற்றோர்களை கடைசியில் வீட்டில் வைத்து பார்க்க முடியாமல் முதியோர் இல்லங்களில் அதிகம் சேர்ப்பவர்கள் ஆண் பிள்ளைகளேயாகும்.

ஆனாலும் ஆண்பிள்ளைகள் மீதான மோகம் இன்னம் குறையவே இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தொடர்ச்சியாக பெண் குழந்தைகளே பிறந்ததால் ஆண்குழந்தை இல்லாததால் கணவன் மனைவியை வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்போலி பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஹோட்டல் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை வேண்டும் என்று அவர்கள் ஆசை கொண்டனர். ஒவ்வொரு முறையும் மனைவி பிரசவத்திற்கு செல்லும் பொழுதெல்லாம் மிகவும் ஆசையாக ஆண் குழந்தை பிறக்கும் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பாரப்பர்.

இருப்பினும் தொடர்ந்து பெண் குழந்தை யாகவே அவருடைய மனைவி பெற்றெடுத்தார். இதனால், அந்த கணவரும் அவருடைய குடும்பத்தினரும் அந்தப் பெண்ணின் மீது கடும் கோபத்திற்கு ஆளாகி இருந்தனர். அத்துடன் சில உறவினர்கள் அந்த கணவனிடம் உன்னோட மனைவியை விரட்டி விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால், உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கலகம் மூட்டினர்.

இதனால் நான்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த தனது மனைவியை விரட்டி விட்டு அந்த கணவன் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அந்த நான்கு பெண் குழந்தைகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். 13 ஆண்டுகாலம் கணவனோடு வாழ்ந்த அந்தப் பெண் எங்கு போவது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளார்.

இந்த வயதில் அனாதை ஆகிவிட்டோமே என்று கண்ணீர் விட்டு அழுது காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது புகார் செய்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவனோடு பெண் வாழ்வதற்கு வழி செய்துள்ளனர்.