இன்றைய ராசிபலன்: 30.07.2020: ஆடி மாதம் 15ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜூலை 30,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி நள்ளிரவு 1:12 வரை, அதன்பின் துவாதசி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 9:47 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம் * சந்திராஷ்டமம் : பரணி * பொது : ஏகாதசி விரதம்.

மேஷம்: உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் சகஊழியர்களை பற்றி குறைகூற வேண்டாம்.

ரிஷபம்: உங்களின் வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமை கொள்வார்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

மிதுனம் : தந்தை வழி சொத்து சம்பந்தமான விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவுவதில் உங்களின் பங்கு கணிசமாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்னும் முயற்சிக்கு நல்ல பலன் இருக்கும்.

கடகம்: புதிதாக சுபச்செலவுகள் உண்டாகும். வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. சிலர் வியாபார ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்.

சிம்மம் : வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். மனதில் இருந்த வேதனை அனைத்தும் மறையும். பிள்ளைகளின் உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவர்.

கன்னி: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கூடும். சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். அரசாங்கத்தின் மூலம் உதவி கிடைக்கும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உறவினர்களுக்கு விருந்து வைப்பதற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன வகையில் ஆதாயம் இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தவும். பெண்கள் அடுத்தவர் கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்து நற்பெயர் பெறுவர். கடன் மூலம் வியாபாரத்தை பெருக்க நினைக்கும் முயற்சிகளை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும்.

தனுசு: சகஊழியா்கள் உங்களுக்கு உதவுகரமாக இருப்பர். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.

மகரம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவரின் பணிச்சுமையைக் குறைப்பீர்கள். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தியானம், பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மனஅமைதியை பெறலாம்.

கும்பம்: உங்களின் அறிவாற்றல் அதிகரிப்பதால் கடினமான செயல்களை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வியாபாரிகள் புதிய இனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

மீனம்: தாயாரின் உடல் நலம் சீராவதால் மருத்துவ செலவுகள் கணிசமாக குறையும். சகோதரியின் திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். மேலதிகாரிகள் முக்கிய விவகாரங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். புதிய வீடு மாறும் சூழல் உருவாகும்.