இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியதாக அச்சம்

மீண்டும் கொரோனா தொற்று

பொலநறுவை மாவட்டம் லங்காபுர பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியா் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவருடன் இவர் நெருங்கிய தொடா்புகளைப் பேணியமை தெரியவந்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அனில் ஜசிங்க மேலும் கூறினார்.

புதிய தொற்று நோயாளியுடன் நேரடி தொடர்புகளைப் பேணியவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் நீண்ட நாட்களாக சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்த நிலையில், லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்டவர் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.