பொது தேர்தலின் பின்னர் பாடசாலை நேரங்களில் புதிய மாற்றம்-கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்.!

பாடசாலை நேரங்களில் புதிய மாற்றம்.!

இலங்கையில் பொதுத் தேர்தல் விடுமுறையின் பின்னர் ஆரம்பமாகும் பாடசாலைகளின் நேரம் மற்றும் வகுப்புகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது .

இதற்கமைய ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியின் பின்னர் பின்வருமாறு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை – 6, 10, 11, 12, 13

செவ்வாய்க்கிழமை – 7, 10, 11, 12, 13

புதன்கிழமை – 8, 10, 11, 12, 13

வியாழக்கிழமை – 9, 10, 11, 12, 13

வெள்ளிக்கிழமை – 9, 10, 11, 12, 13

 

அத்துடன் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் 10, 11, 12, 13 ஆகிய வகுப்புகளுக்கு காலை 7.30 மணி முதல் காலை 3.30 மணி வரை பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 200 க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஆரம்பக்கல்வி பாடசாலைகளில் திங்கட்கிழமை – 1 மற்றும் 5ஆம் தரத்திற்கும் செவ்வாய்க்கிழமை – 2 மற்றும் 5 ஆம் தரத்திற்கும், புதன்கிழமை – 3 மற்றும் 5 ஆம் தரத்திற்கும், வியாழக்கிழமை – 4 மற்றும் 5 ஆம் தரத்திற்கும், வெள்ளிக்கிழமை – 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கும் வழமையான நேரத்தில் பாடசாலைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.