இலங்கையில் சமூகத்திற்குள் பரவிய கொரோனா! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த பொலன்னறுவை மாவட்டம் லங்காபுர பிரதேச செயலக அலுவலக ஊழியருடன் தொடர்புபட்டிருந்த 325 பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட் உள்ளது.

குறித்த நபருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் நெருக்கமாக தொடர்புகளை பேணியவர்கள் இனம் காணப்பட்டு 325 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 325 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூலை-31) வெளியிடப்பட உள்ளது.

இதற்கு முன்னர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களான இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை நேற்று (ஜூலை-30) உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை, அரச வங்கி ஒன்று ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.